உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் விகாஸ் தியாகி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்தப் பெண்  விகாஷ் மீது கொலை முயற்சி மற்றும் பாலியல் பலாத்காரம் என அடுக்கடுக்காக பல புகார்களை கொடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தன்னுடைய கணவனின் நண்பர்கள் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னுடைய பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகியதாகவும் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கிலும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இரு வழக்கு தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இறுதியாக அந்த பெண் பொய் புகார் கொடுத்தது தெரியவந்தது. அதாவது கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் விகாஸ் உடன் அந்த பெண் லிவிங் உறவில் இருந்தார். அப்போது விகாஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் கூறினார். அதோடு அந்த சமயத்தில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும் அவர் தன்னை வயிற்றில் எட்டி உதைத்ததால் தன்னுடைய கரு கலைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது மாற்றி கூறிவிட்டார்.

அதாவது விருப்பத்தோடு நாங்கள் இருவரும் உறவு மேற்கொண்டதாகவும் நீதிமன்றத்திற்கு வெளியே நாங்கள் இருவரும் தற்போது சமரச பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும் கூறினார். அதோடு  டாக்டர் அறிவுரையை கேட்காததால் தான் தனக்கு கருசிதைவு ஏற்பட்டதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றுமாறு போலீஸ் ஸ்டேஷனை அந்த பெண் நாடினார். அதாவது விகாஸ் மற்றும் அவருடைய மைத்துனர் மற்றும் நண்பர்களில் ஒருவர் சேர்ந்து என்னை மிரட்டி பொய்யான வாக்குமூலம் கொடுக்க வைத்ததாக அந்த பெண் கூறினார். பின்னர் மீண்டும் அதே மாதம் விகாஷை நான் திருமணம் செய்து கொண்டேன். எனவே முன்பு கூறிய புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டார்.

பின்னர் கடந்த ஜனவரி மாதம் தங்களுடைய திருமண முறையாக நடந்தது கிடையாது எனவும் திருமண ஆசை காட்டி தன்னை விகாஸ் கற்பழித்து விட்டதாகவும் தன்னை உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அந்த பெண் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதில் காயங்கள் இருப்பது உண்மை என தெரிய வந்ததால் விகாசை கைது செய்து சிறையில் அடைத்தனார்.

இதைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒரு பரபரப்பு புகாரோடு அந்த பெண் போலீஸ் ஸ்டேஷன் வந்தார்‌. அதாவது மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது விகாஸ் நண்பர்கள் தன்னை கடத்திச் சென்று என்னுடைய சுயநினைவை இழப்பதற்காக ஏதோ மர்ம பொருள் அடங்கிய ஊசியை செலுத்தினர். பின்னர் அவர்கள் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு என்னுடைய கழுத்தில் ரசாயனத்தை தடவியதோடு பிறப்புறுப்பிலும் பாட்டிலை சொருகியதாக கூறினார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்ததாக அந்த பெண் கூறிய நிலையில் தன்னை ஒரு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்றதாகவும் கூறினார். பின்னர் போலீசார் அந்த பெண் சொன்ன இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்து இரவு 8 மணி அளவில் வெளியேறியதும் பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்ததும் தெரிய வந்த நிலையில் அவர் சாதாரணமாக இருந்ததும் தெரிய வந்தது. அந்தப் பெண் தன்னைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சொன்ன நபர்களும் சம்பவநாளில் அங்கு கிடையாது. மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் அவரே அவர் மீது ரசாயனத்தை ஊற்றிக் கொண்டது தெரிய வந்தது. ஏதோ ஒரு காரணத்துக்காக விகாஷ் நண்பர்களை சிக்க வைக்க அந்த பெண் இப்படி ஒரு புகாரை கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.