
பீகாரின் கதிஹாரில் மீன் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால், அந்த சாலை எதிர்பாராத மீன் சந்தையாக மாறிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த விபத்தில் உதவி செய்ய யாரும் முன்வராதா நிலையில் அதற்கு மாறாக அங்கிருந்த மக்கள் மூட்டைகளையும், பைகளையும் எடுத்து சிதறிக் கிடந்த மீன்களை சேகரிப்பதில் குறியாக இருந்தனர். இந்த விபத்து நடந்த சாலையில் அந்த ஓட்டுநர் நிலையை பற்றி ஒருத்தரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் மக்கள் ஒரு பொக்கிஷத் தேடிக்கொண்டிருந்தனர். மனித நேயத்தை காற்றில் பறக்கவிட்டபடி ..!
ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஏற்கனவே 830 பார்வைகளையும் பல கருத்துக்களையும் பெற்றுள்ளது. “பீகாரின் கதிஹாரில் மீன் லாரி கட்டுப்பாட்டை இழந்த பிறகு மக்கள் மீன்களை கொள்ளையடித்தனர்” என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளி நிற மின்னிய அந்த மீன்கள் அசுத்தமான சாலையில் சிதறிக்கிடப்பது, மக்கள் அவற்றை பதறியடித்து சேகரித்து ஓடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் காணப்படுகின்றன. வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கவிழ்ந்த லாரியில் இருந்து மீன்களை முந்தியடித்து எடுப்பதில் ஆர்வம் காட்டினர். சிலர் இதை தங்கள் ஃபோன்களில் படம் பிடித்தும் இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவ, சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்கள் செய்துவருகின்றனர்.
View this post on Instagram
“>