தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் யோகிபாபு. இவர் பிரபல காமெடியனாக மட்டுமல்லாமல் சிறந்த கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பொம்மை நாயகி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யோகிபாபு.

இந்த நிலையில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகி பாபு சென்றபோது அவர் கார் விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவிலை. அதிகாலை 3 மணி அளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது கார் ஏறி உள்ளது. இதனையடுத்து வேறொரு காரில் யோகி பாபு பெங்களூருக்கு புறப்பட்டுள்ளார்.