
கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கில்லாடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மடனூறு மனு. இவர் குலதள்ளி கீல்யவுதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று மாநிலம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் துணை நடிகை ஒருவர் மடனூறு மனு மீது காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு காமெடி கில்லாடி நிகழ்ச்சிக்கு சென்ற போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சி முடிந்த பிறகு எனது அறைக்கு வந்த மடனூறு மனு கட்டாயப்படுத்தி என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3- ஆம் தேதி எனக்கு தாலி கட்டினார்.
தொடர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதனால் இரண்டு முறை நான் கர்ப்பமானேன். அவர் மிரட்டியதால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன். தற்போது என்னை பாலியல் பலாத்காரம் செய்தது வீடியோ எடுத்து மிரட்டுகிறார் என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மடனூறு மனுவை கைது செய்தனர்.