கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்ட கேள்விக்கு, நடிகர் விஜய்க்கு ‘வாழ்த்துக்கள்’ என தெரிவித்தார்.

இந்நிலையில் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விஜய் நன்றி தெரிவித்தார்.