ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் மவுண்ட் அபுவில், ஹனுமான் கோயில் அருகே செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணி உயிரிழந்தார். அகமதாபாத்தைச் சேர்ந்த 3 நண்பர்களுடன் மவுண்ட் அபுவை பார்வையிட வந்த 29 வயதான விபின் படேல், கோயில் அருகே 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தகவல் கிடைத்தவுடன் மவுண்ட் அபு காவல் நிலைய போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் விரைந்து வந்து கயிறு உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபின் படேலை வெளியே எடுக்க ஒரு மணி நேரம் ஆனது.
राजस्थान: माउंट आबू घूमने आए पर्यटक का सेल्फी लेने के चक्कर में 300 फीट गहरी खाई में गिरा युवक
◆ सूचना मिलने पर मौके पर पहुंचा नगर पालिका का आपदा दल
◆ करीब 2 घंटे की मशक्कत के बाद युवक को बाहर निकालकर उसे अस्पताल ले जाया गया
◆ जहां प्रारंभिक जांच के बाद डॉक्टर ने युवक को… pic.twitter.com/nGEh2flWEp
— News24 (@news24tvchannel) August 1, 2025
மீட்புப் பணிக்குள் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம், சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதது குறித்து கேள்விகள் எழும்பக்காரணமாகியுள்ளது. பிரபலமான மவுண்ட் அபுவில், பள்ளத்தாக்குகள் மற்றும் அபாயமான இடங்களின் அருகே பாதுகாப்புக் கட்டுகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாதது குறித்து சமூக வலைதளங்களிலும் கண்டனம் எழுந்துள்ளது.
