உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி ஆக்லாந்திலுள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு இனிதே பிறந்தது. இதற்கிடையில் சிட்னி நகரில் வண்ண விளக்குகளால் துறைமுக பாலம் அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில், புத்தாண்டை வரவேற்கும் வகையில் கண்கவர் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளில் 2023 புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. ஆனால் அமெரிக்கா அருகில் உள்ள பேக்கர், ஹாவ்லாண்ட் தீவுகளில் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. இதை அந்த தீவுகளில் உள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகின் கடைசியாக இங்கு தான் புத்தாண்டு பிறக்கும். அதே போன்று மத்திய பசுபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும்.