“கடைசிப் பந்துல அவன் பேட்லயே அடிக்கல, அதுக்கு எப்படி லெக்-பை ரன் கொடுக்கலாம்?” என்று இலங்கை அணிக்கு சாதகமாக நடுவர்கள் வழங்கிய சர்ச்சைக்குரிய முடிவால் எல்லையற்ற கோபமடைந்த இந்திய கேப்டன் திலக் வர்மா, எல்லைக்கோட்டிற்கு அருகே நடுவர்களுடன் மிகத் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அவரை சமாதானப்படுத்தி சண்டையிலிருந்து விலக்கி இழுத்துச் சென்ற நெகிழ்ச்சியான காட்சி கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
போட்டியின் இறுதிப் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படாத நிலையிலும், நடுவர்கள் இலங்கை அணிக்கு ‘லெக்-பை’ ரன் வழங்கியதால் ஆட்டம் சமனில் முடிந்தது; இதனால் ஆத்திரமடைந்த திலக் வர்மா, மங்கலான வெளிச்சத்தில் சூப்பர் ஓவர் நடத்தப்படுமா என்ற தாமதத்தின் போது நடுவர்களுடன் ஆக்ரோஷமாக மோதினார்.
அப்போது கேப்டனை தடுத்து நிறுத்தி, நிலைமையை நிதானமாக கையாண்ட அதே சூர்யவன்ஷி, சூப்பர் ஓவரில் இந்தியா தோல்வியடைந்த அடுத்த சில நிமிடங்களிலேயே முற்றிலும் தலைகீழாக மாறினார்.
தோல்விக்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறிய தன்னை இலங்கை வீரர்கள் தேவையின்றி வம்பு இழுத்துத் தூண்டியதால், பொறுமை இழந்த அந்த 15 வயது இடதுகை ஆட்டக்காரர், சற்றும் யோசிக்காமல் எதிரணி வீரர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து சண்டையில் ஈடுபட்ட விசித்திர நாடகம் தற்போதைய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Vaibhav stopping Captain Tilak from arguing with the umpires 😂 pic.twitter.com/m5mnD1wtNa
— Abhi (@AbhiMSD_07) June 15, 2026
“>
