தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் 70 வயது மூதாட்டி ஒருவர் தங்க நகை வாங்குவது போல வந்துள்ளார். அந்த மூதாட்டி கடை ஊழியர் அசந்த நேரத்தில் தங்க செயினை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை வைத்துள்ளார். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடை ஊழியர் சற்று திரும்பும் நேரத்தில் கவரிங் நகைகளை பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துவிட்டு அதற்கு பதிலாக தங்க சங்கிலியை மூதாட்டி திருடி செல்கிறார். சிறிது நேரம் கழித்து நகை காணாமல் போனதை அறிந்ததும் கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மூதாட்டி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.