விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் இனியா என்ற ரோலில் நேஹா நடித்து வருகிறார். இவர் அடிக்கடி ட்ரோல்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் இனியா ஆடியோ டான்ஸுக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என்று கதறுவது போல காட்சிகள் சீரியலில் வந்தது. அதை வைத்து இணையவாசிகள்  கடுமையாக ட்ரோல் செய்து வந்தார்கள். இதற்கு மூன்றாம் பரிசு கொடுத்ததே தப்பு முதல் பரிசு வேற வேணுமா? என்று மீம் போட்டும் கலாய்த்து வந்தார்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றி பேசிய நேஹா, “ஒரு கட்டத்தில் நான் யாருக்கும் எதுவும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலை எனக்கு வந்துவிட்டது. அவர்கள் பற்றி பேச பேச… எல்லாரும் மனிதர்கள் தான். எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என மனதிற்கு தெரியாது. இதெல்லாம் என்னை காயப்படுத்தியது. ஆனால் அதன் பிறகு அது என்னை இன்னும் வலிமையாக மாற்றியது. கண்ணாடி முன்பு நின்று நான் அழகாக இருக்கிறேன் என என்னாலே சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அதையும் சொன்னேன். அது என்னை வலிமையாக்கியது ” என்று பேசி உள்ளார்.