
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாடனகுப்பே கிராமத்தில் லிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேஜஸ்வினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 8 வயது ஆகிறது. அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் சிறுமி படித்து வந்தார். நேற்று பள்ளியில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென தேஜஸ்வினி மயங்கி விழுந்தார்.
மேலும் சுயநினைவு இல்லாமல் சிறுநீரும் கழித்து விட்டார். இதனால் பதறிப்போன ஆசிரியை பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.