திருப்பூரில் மாரத்தான் போட்டி நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அவர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் திடீரென கடவுளே  அஜித்தே என்று கோஷமிட ஆரம்பித்தனர்.

இதனால் ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்திய டிடிவி தினகரன் பின்னர் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டார். தொடர்ந்து அமைதியான அவர் கோஷம் நின்ற பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வரும் நிலையில் சமீப காலமாக இந்த கடவுளே  அஜித்தே கோஷம், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.