
மெக்சிகோ கடற்கரையில் டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கியுள்ளது. ஆழ்கடலில் வாழும் இந்த மீன்கள் நீளமான உடல்வாகு, ஆரஞ்சு நிறத்தில் மிளிரும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மீன்கள் கடலின் மேல் பகுதியிலோ கரைப்பகுதியிலையோ தென்படாது. இந்த நிலையில் பேரழிவு ஏற்படப்போகிறது என்றால் மட்டுமே இந்த ஆழ்கடல் மீன்கள் வெளியே வரும் என கூறப்படுகிறது.
ஜப்பானிய புராண கதைகளின் அடிப்படையில் இந்த மீன்களை கடவுளின் தூதர் என சொல்வார்களாம். கடந்த 2011-ஆம் ஆண்டு 20-க்கும் மேற்பட்ட டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கியது. அந்த ஆண்டு மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போதும் இந்த மீன்கள் கரை ஒதுங்கியதால் பேரழிவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.