தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் வில்லன் வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவருடைய மகன் துக்ளக் அலிகான். இவர் கஞ்சா வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இவர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவருடைய ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் அவர் தினமும் ஜெ ஜெ நகர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.