
இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. குறிப்பாக ஈரானில் உள்ள அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்கா அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதி கொடுத்துள்ளது. ஏற்கனவே ஈரான் சைபர் தாக்குதல் மூலமாக எங்கள் ஆவணங்களை இஸ்ரேல் திருடிவிட்டதாக குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் தற்போது டாப் சீக்ரெட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்க உளவுத் துறையில் இருந்து டாப் சீக்ரெட் என்ற பெயரில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளது. அதில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக இஸ்ரேல் படைகள் பிரத்தியேக பயிற்சி எடுத்து வருவதாகவும், தாக்குதலுக்கு அவர்கள் ஒத்திகை பார்ப்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான முதல் ஆவணத்தில் ஈரான் நாட்டின் விமானப்படை மீது இஸ்ரேல் எப்படி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்ற விவரம் உள்ளது. மற்றொரு ஆவணத்தில் ஈரானுக்கு எதிராக எப்படி தங்கள் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்தை இஸ்ரேல் எப்படி தயார்படுத்தி வருகிறது என்ற விவரங்கள் இருக்கிறது. மேலும் இந்த இரு ஆவணங்களும் அமெரிக்க உளவுத்துறையில் இருந்து வெளியான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.