
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியமானதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் தன்னுடைய வருங்கால கணவருடன் ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அந்த வீடியோவில் பெண் தன் மடி நிறைய பணத்தை வைத்துக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
பக்கத்தில் அந்த வாலிபர் போட்டோவுடன் கூடிய செல்போன் மற்றொரு நாற்காலியில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் நெற்றியில் பெரிதாக குங்குமம் வைக்கப்பட்டுள்ள நிலையில் போனில் உள்ள வாலிபரின் போட்டோவுக்கும் பெரிய பொட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதான் டிஜிட்டல் நிச்சயதார்த்தமா என்று கேட்கும் அளவிற்கு வீடியோ உள்ளது. மேலும் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறும் நிலையில் தற்போது இந்த டிஜிட்டல் நிச்சயதார்த்தம் பேசும் பொருளாக மாறி உள்ளது.
View this post on Instagram