அரியானா மாநிலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு சூப்பரான அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஊதியளவு உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கும் பெரிய பரிசு ஒன்றை அரசு வழங்கியுள்ளது. அதன்படி மாநில அரசு டிஜிட்டல் மீடியா கொள்கை 2023க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த மாதாந்திர ஓய்வூதிய தொகையை உயர்த்தியுள்ளது.

அதே சமயம் 60 வயதுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான முன் முடிவுகள் அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் பத்திரிகையாளர்களின் காப்பீட்டு தொகையை 5 லட்சம் ரூபாயில் இருந்து பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் பத்து லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு பிரீமியத்தையும் 100 சதவீதத்தை மாநில அரசு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.