
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜாக்சன்(59) பல ஆண்டுகளாக ஓமனில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி சஜிதா(53). இந்த தம்பதியினர் மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஹோட்டல் மாடியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அதிகாலை நேரம் ஹோட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து பங்கஜாக்சனும், சஜிதாவும் இடைபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த பங்கஜக்சனின் மகள் ஓமன் நாட்டிற்கு விரைந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.