
கட்சியில் நான் எல்லோருக்கும் பொதுவானவர் கால நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன். ஜாதி அடிப்படையில் நான் செயல்பட்டதில்லை. ஜாதி அடிப்படையில் நான் செயல்பட்டு இருந்தால் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராகியிருப்பேனா? என்றும் கூறியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கக் கூடாது. அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை என்னுடைய நோக்கம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.