அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவிக்கு காய்களை நகர்த்துவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்த பிறகு ஓபிஎஸ் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஆன மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஐயப்பன் மற்றும் எம்பி ரவீந்திரநாத் ஆகியோரின் பதவிகளுக்கும் சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் அதிமுகவின் சின்னத்திலிருந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் எம்எல்ஏ பதவிகளையும் பறிப்பதற்கு எடப்பாடி திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக கொறடா மூலம் சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி அனுப்புவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை எடப்பாடி பழனிச்சாமி அணுகலாம் என்று கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்களின் பதவிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

ஏனெனில் இனி எதிர்கட்சித் தலைவர் இருக்கையில் ஆர்பி உதயகுமார் சட்டசபையில் அமர்ந்து விடுவார். இனி பதவிக்காலம் முடிவடையும் வரை ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்களுக்கான இருக்கையைப் வெற்று சட்டசபையில் அமர்வார்கள். பதவி காலம் முடிவடைந்த பிறகு தான் ஓபிஎஸ் எதிர்காலம் என்ன? அவருக்கு பாஜக ஏதாவது செய்யுமா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.