அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் எடப்பாடி தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் தனியாக பிரிவதை பாஜக விரும்பவில்லை.

ஏனெனில் ஓபிஎஸ் மூலமாக முக்குலத்தோர் வாக்குகளை பெற முடியும் என்பதால் பாஜக அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என்று தான் விரும்புகிறது. ஆனால் அது தற்போது நடப்பதற்கு சாத்தியம் இல்லாததால் பாஜக ஓபிஎஸ்-ஐ தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் முக்குலத்தோர் வாக்கு பாஜகவுக்கு கிடைக்கும் என்று பாஜக திட்டம் போட்டுள்ளதாம். மேலும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியை கொடுத்து அவரை தேற்றுவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.