ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டும் குற்றம் அல்ல வாங்குவதும் குற்றம்தான் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் பேட்டியளித்த அவர், அடுத்த இரண்டு நாட்களுக்கு வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (1) இன் கீழ் வாக்களிக்க பணம் பெறுவது லஞ்சம் பெறுவதற்கு இணையான குற்றமாகும். இப்படி பணம் பெறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 171 (b) இன் படி வழக்கு பதிவு செய்து ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். அதனால் பணம் வாங்காமல் ஜனநாயக கடமையாற்றுவதே நமக்கும் நாட்டுக்கும் நல்லது.