
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். இவர்கள் கடப்பாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்ற நிலையில் பின்னர் ரயில் மூலமாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே வந்தபோது அந்த குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாபு என்ற ஒரு 30 வயது வாலிபர் சிறுமியிடம் திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்த நிலையில் சிறுமி கத்தி கூச்பலிடவே வாலிபர் உடனடியாக வேறு பெட்டிக்கு சென்று விட்டார்.
சத்தத்தை கேட்டு எழுந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது பாலியல் தொந்தரவு குறித்து கூறினார். இதனையடுத்து பெற்றோர் அந்த வாலிபரை தேடி பிடித்து தர்ம அடி கொடுத்து டிக்கெட் பரிசோதனை ஒப்படைத்தனர்.
அந்த ரயில் ஜோலார்பேட்டையை அடைந்ததும் காவல்துறையினரிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.