ஜார்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில் நிலையம் உள்ளது. இங்கு ராஞ்சி-சசரம் ரயிலில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்பட்டது. திடீரென தீப்பிடித்ததாக யாரோ வதந்தி பரப்பிய நிலையில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தனர்.

இதில் 3 பேர் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்க்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.