இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வீடியோ எடுக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதற்காக சில சமயங்களில் என்ன செய்கிறோம் என்பதை மறந்து தவறான செயல்களை செய்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு சில நேரங்களில் உயிரை இழக்கும் சம்பவங்கள் கூட அரங்கேறுகிறது. இந்த நிலையில் ஒரு யுடியூபர் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஓடும் ரயிலில் நடைபாதையில் நின்று கொண்டு உள்ளே இருந்த ஒரு பயணியை கன்னத்தில் அறைந்தார்

.அவர் ரயில் சென்று கொண்டிருக்கும்போது சட்டென அந்த பயணியை கன்னத்தில் அறைந்த நிலையில் பின்னர் திரும்பிப் பார்த்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வயதான நிலையில்பயனர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதாவது பீகார் மாநிலத்தில் உள்ள அனுக்ரஹ நாராயண் ரோடு ரயில் நிலையத்தில், யூடியூபர் ரிதேஷ் குமார், சமூக ஊடக புகழை பெறும் நோக்கத்தில், ஒரு பயணியை ரயிலில் அறைந்தார். இந்தச் சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பரவியது. இதைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை (RPF) இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, ரிதேஷ் குமாரை கைது செய்தனர். அதோடு அவரை பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்க வைத்தனர்.

RPF தங்களின் சமூக ஊடக தளத்தில், பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்பதை வலியுறுத்தி, “பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் – பொறுப்பற்ற செயல்கள் சகிக்கப்படாது” என்று தெரிவித்தது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் கிடைத்தன, மேலும் பலர் இத்தகைய செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.