
ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு ரயில் தமிழகத்திற்கு கிளம்பியது. இந்த ரயில் கிளம்பிய நிலையில் மோனிகா குமாரி (21) என்ற இளம் பெண் அதில் ஏற முயன்றுள்ளார். அந்த ரயில் மெதுவாக சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் இளம் பெண் கீழே விழுந்துவிட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளம்பெண்ணை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ரயில்வே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இப்படி துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிர்களை காப்பாற்றி வரும் நிலையில் அவர்களின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
#Watch | Close Shave For Woman After She Falls Under Moving Train In Ranchi
Read Here: https://t.co/omfu1aLKqK pic.twitter.com/a2PCHD8xXa
— NDTV (@ndtv) June 29, 2024