
தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஒரு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் மணியரசன். இவர் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சம்பவ நாளில் அவரது கடைக்கு சென்றுள்ளார். அவர் தனக்கு இலவசமாக இறைச்சி வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் மணியரசன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குமார் நீண்ட நேரமாக வாக்குவாதம் செய்து மணியரசன் இலவசமாக கொடுக்கவில்லை.
குமார் மயானத்தில் சடலத்தை புதைக்க அவ்வப்போது குழி தோண்டுவார். இந்நிலையில் கடையிலிருந்து புறப்பட்ட குமார் சிறிது நேரத்தில் சுடுகாட்டில் இருந்து 4 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு அழுகிய சடலத்தை தோண்டி எடுத்து வந்து கடையின் முன்பாக போட்டுவிட்டார். இதை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சடலத்தை அப்புறப்படுத்தியதோடு குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.