
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்தனர். அவரது பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் நூறு முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என கூறி மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி அளித்த பேட்டியில் கூறியதாவது, நேற்று தர்மேந்திரா பிரதான் தமிழ்நாட்டை அவமதித்தார். இன்று இந்திய நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டையும் முதலமைச்சரையும் அவமதித்து பேசியுள்ளார். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை அவமதிக்கும் போக்கை பாஜக அமைச்சர்கள் பின்பற்றுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.