உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் டெக்ஸ்டாப் பயனர்களுக்கும் தற்போது தங்களின் குடும்ப உறுப்பினர்கள்மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலருடன் குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்வதற்கான அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது விண்டோஸ் டெஸ்க்டாப் பயனர்களுக்கு புதிய செயலை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் விண்டோஸ் டெக்ஸ் டாப் பயனர்கள் தற்போது ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களுடன் தங்களின் whatsapp கணக்கை இணைக்கலாம் என்று புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

  • 1. அதற்கு முதலில்  WhatsApp பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலில், Settings என்பதற்குள் சென்று, “Linked Devices” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 2.பிறகு “Link a New Device” என்பதை கிளிக் செய்து நீங்கள் இணைக்க இருக்கும் Windows Desktop-ல் web.whatsapp.com என்ற WhatsApp Web-க்கான இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • 3. அதில் தோன்றும், QR code-ஐ Scan செய்தால் போதும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.
  • 4. இதே போன்று மற்ற 3 சாதனங்களில் இணைக்க, மேற்கண்ட 3 படிநிலைகளை திரும்ப செய்யவும்.
  • 5.இதனை போலவே  4 சாதனங்களுடன் இணைக்கப்பட்ட பிறகு உங்களின் மொபைல் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் Offline சென்றாலும் இந்த இணைக்கப்பட்ட சாதனங்களில் உங்களால் பயன்படுத்த முடியும்.