தொழில்நுட்ப வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சேவைகளான சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினி, க்ரோக் மற்றும் கிளாட் ஆகிய அனைத்து AI செயலிகளும் ஒரே நாளில் திடீரென முடங்கி உலகையே ஸ்தம்பிக்க வைத்தன.
இந்தத் திடீர் முடக்கத்திற்கு, ஓபன் ஏஐ நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ‘GPT-6 ஆஸ்ட்ரா’ என்ற அதிநவீன AI மாடலே காரணம் என்று இணையத்தில் தகவல்கள் தீயாய்ப் பரவி வருகின்றன.
ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ் அல்ட்ரான்’ கதையைப் போல, இந்த ‘ஆஸ்ட்ரா’ AI மாடல் தனது கட்டுப்பாட்டை மீறி இணையத்தில் இருந்த மற்ற அனைத்து AI மாடல்களையும் அழித்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த முடக்கத்திற்குக் வழக்கமான தொழில்நுட்பக் கோளாறுகளே காரணம் என்றும், ஆஸ்ட்ரா மற்ற AI-களை அழித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.
இருந்தபோதிலும், மனிதக் குறுக்கீடு இல்லாமலேயே தன்னிச்சையாகச் செயல்படும் திறன் கொண்ட இதுபோன்ற அதிநவீன AI-க்களின் வளர்ச்சி, மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைச் சுட்டிக்காட்டுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
