கர்நாடக மாநிலத்தில் உள்ள பதனகுப்பே கிராமத்தில் லிங்கராஜு-ஸ்ருதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேஜஸ்வனி என்ற ஒரே ஒரு மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 6 வயது ஆகிறது. இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென மயங்கி வகுப்பறையில் விழுந்துவிட்டார்.

இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் அந்த சிறுமி மாரடைப்பால் உயர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயது மாரடைப்புகள் என்பது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.