இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வணிகப் பயன்பாட்டிற்கான (Commercial) 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் (மே 1) யாரும் எதிர்பாராத விதமாக ஒரே நாளில் ₹993 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ₹3,071-ஆக அதிகரித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதே இந்த அதிரடி உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திடீர் விலை உயர்வு டெல்லி வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு விரைவில் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் ₹2,246-க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் ₹928.50-க்கும் விற்பனையாகி வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் தற்போதைக்கு மாற்றம் இல்லை என்றாலும், வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.