தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதே சமயம் மின்மீட்டர் பொருத்துவதற்கான விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் அல்லது ஆவணம் இணைக்க தவறினால் அடுத்த மூன்று நாட்களுக்குள் அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் .

மேலும் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாவிட்டால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அதே சமயம் மின்வாரியம் புதிய மின் இணைப்பிற்கான மீட்டர்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழகம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.