உத்தரபிரதேசம், ராம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற வினோதமான குடும்பச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், 1½ வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் சில மாதங்களில் இருந்தே வேறொரு இளைஞருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இவர், அடிக்கடி அவருடன் செல்போனில் பேசியதோடு மட்டுமின்றி, பலமுறை வீட்டிலிருந்து ஓடி சென்றார். ஒரு வருடத்துக்குள் 10 முறை கள்ளக்காதலனுடன் தலைமறைவான இவரை, ஒவ்வொரு முறையும் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இருந்தாலும், தனது பழக்கத்தை விட்டுவைக்காமல், தொடர்ந்து அந்த இளைஞரை சந்தித்து வந்தார்.
இந்த பிரச்சனை பெரிதாகி, கணவன், மனைவிக்குள் தொடர்ச்சியான சண்டைகளாக மாறியதால், குடும்பத்தினரால் கிராம பஞ்சாயத்து கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில், அந்த இளம்பெண், “ஒரு மாதத்தில் 15 நாட்கள் எனது காதலனுடன் தங்க அனுமதி வழங்கப்பட்டால், மீதமுள்ள 15 நாட்கள் கணவருடன் வாழ தயாராக இருக்கிறேன்” என்ற அதிர்ச்சிகரமான தீர்மானத்தை எடுத்தார்.
அவரது வினோதமான இந்த முடிவை கேட்ட குடும்பத்தினர், கிராமப் பெரியவர்கள் மற்றும் கணவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பல மணி நேர ஆலோசனையிலும், பெண் தனது நிலைப்பாட்டை மாற்ற மறுத்தார். இதனால் மனமுடைந்த கணவர், மனைவியுடன் வாழ்வதை நிராகரித்து, அவரை கள்ளக்காதலனிடம் தாரைவார்த்துவிட்டு விலகிச் சென்றார்.
இந்த சம்பவம் தற்போது உள்ளூர் மற்றும் தேசிய அளவில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
