
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இருப்பினும் இராணுவம் ஆட்சியைப் பிடித்த நிலையில் இடைக்கால அரசின் புதிய தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது நிலைமை சற்று கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டும் என மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஒரு மணி நேரம் கெடு விதித்ததுடன் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.
அதாவது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடானது உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்திய நிலையில் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அதிபர் முகமது சகாபுதீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதைத் தொடர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.