அப்பா, உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா! என்று மகள் அனுப்பிய ஒரே ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்த அடுத்த நொடியே, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் 14 மணி நேரம் தொடர்ந்து காரில் பயணத்து மகளின் வாசலில் வந்து நின்ற தந்தையின் பாசப் போராட்டம், சோசியல் மீடியா உலகையே நெகிழ வைத்துள்ளது.

வேலை, வாழ்க்கைச் சூழல் என எத்தனையோ தூரங்கள் தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருந்தாலும், பாசத்திற்கு எந்த எல்லையும் இல்லை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது. மகளின் சின்னஞ்சிறிய ஏக்கம் நிறைந்த அந்த மெசேஜ், தந்தையின் இதயத்தை எந்த அளவுக்கு உலுக்கியிருக்கும் என்பதை உணர்த்தும் இந்த வைரல் வீடியோ, இணையவாசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

தொலைதூரத்தில் படித்துக்கொண்டோ அல்லது வேலை பார்த்துக்கொண்டோ இருக்கும் மகள், தந்தையின் நினைவில் உருகி அந்த மெசேஜை அனுப்பியுள்ளார். ஆனால், மகள் அனுப்பிய மெசேஜைப் பார்த்த அந்தத் தந்தை, உடனடியாகத் தனது வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, விடிய விடிய 14 மணி நேர நீண்ட பயணத்தை மேற்கொண்டு மறுநாள் காலையிலேயே அவளது வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.

கதவைத் திறந்த மகள், தன் கண்ணெதிரே தந்தை சிரித்த முகத்தோடு நிற்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் உறைந்துபோய், ஓடிவந்து தந்தையைக் கட்டிப்பிடித்துக் அழுத காட்சி பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.

தந்தை – மகள் அன்பிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்பதைப் பறைசாற்றும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ, சோசியல் மீடியா தளங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து தீயாகப் பரவி வருகிறது. “ஒரு பொண்ணுக்கு இந்த உலகத்துல அதிசிறந்த பாதுகாப்புன்னா அது அவளோட அப்பாதான்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது சொந்த நினைவுகளையும் உணர்ச்சிகளையும் கமெண்ட்டுகளில் கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வளவு பிஸியான உலகத்தில் நாம் வாழ்ந்தாலும், குடும்பத்தின் அன்பும் பாசமும்தான் மனித வாழ்க்கையின் ஆகப்பெரிய பொக்கிஷம் என்பதை இந்த அழகிய தருணம் அனைவருக்குமே மிக ஆழமாக உணர்த்தியுள்ளது.

“>