இந்தியாவுடனான பதற்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் தற்போது பலூசிஸ்தானிலும் கடும் தடுமாற்றத்தில் சிக்கியுள்ளது. பலூச் விடுதலை போராளிகள், பாகிஸ்தான் இராணுவத்தின் பல முக்கிய நிலைகளைக் கைப்பற்றி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாக் படைகள் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எரிவாயு குழாய் இணைப்புகள் சேதப்படுத்தப்பட்டு, ராணுவ முகாம்களுக்கு அருகில் வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கைபர் பக்துன்க்வா பகுதிகளில் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜம்மு, பதான்கோட், உதம்பூர் உள்ளிட்ட இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் குறி வைத்த போது, இந்தியா அதற்கு கடுமையான பதிலடி அளித்தது.

லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகள் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பலூசிஸ்தான் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் பாகிஸ்தானின் நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.