
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதாவது சீமான் தங்களை கட்சியில் வளர விடுவது கிடையாது என்றும் எங்களுக்கு ஒரே அங்கீகாரம் கட்சியில் கிடைப்பதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்.
சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அப்படி இணைந்தது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கிடையாது என்று சீமான் மறுத்திருந்தார். இந்நிலையில் சீமான் நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.
இது உலகம் முழுவதும் இருக்கிறது. ஒரு நேர்மையாளர் கண்டிப்பாக சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும். காமராஜர் மற்றும் நேரு போன்ற மிகச் சிறந்த தலைவர்கள் அன்பான சர்வாதிகாரிகளாக இருந்துள்ளனர். கட்சி விதிகளுக்கு கட்டுப்படாமல் இருந்துவிட்டு நான் சர்வாதிகாரியாக இருப்பதாக நினைத்தால் அவர்கள் கட்சியை விட்டு தாராளமாக வெளியேறலாம் என்று கூறினார். கட்சி விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை.
நான் சர்வாதிகாரியாக இருக்கிறேன் என்றால் போய்விடு என்றும் கூறினார். மேலும் அது தொடர்பான விஷயத்தில் அரசின் கொள்கை முடிவு என்று கூறி நீதிமன்றம் தலையிட மறுக்கிறது. இதேபோன்று நீட் தொடர்பான விஷயத்திலும் அரசின் கொள்கை முடிவு என்று கூறினால் அதனை நீதிமன்றம் ஏற்க மறுத்து தேர்வு எழுதுமாறு கூறுகிறது. மேலும் ஒரே நீதிமன்றம் தான் இப்படி இரு வேறு தீர்ப்புகளை வழங்குகிறது என்றும் கூறினார்.