
மதுரையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகை கஸ்தூரி ஒரு 12 வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அம்மா. அந்த குழந்தையை அவர் தனியாக கவனித்து வரும் நிலையில் திமுக பேசாத பேச்சையா அவர் பேசிவிட்டார். சரி விடுங்க அந்த பேச்சுக்குள் நான் செல்லவில்லை. ஒரு நடிகையை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஆனால் கைதாகி ஒரு வருடத்திற்கு மேல் சிறைக்கு சென்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை இன்னும் பிடிக்க முடியவில்லை.
முதல்வர் ஸ்டாலினுக்கு கீழ் காவல்துறை இருக்கும் நிலையில் இன்னும் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியவில்லை என்றால் என்ன சொல்வது.? மேலும் எத்தனை நாட்களுக்கு முன்பாக தேர்தல் பணிகளை தொடங்கினாலும் கண்டிப்பாக திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் வருகிற சட்டமன்ற தேர்தலோடு மக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி விடுவார்கள் என்று கூறினார்.