இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போராட்டம் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், காசா பகுதியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபீக்லின், “காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எதிரி, ஒரு குழந்தை கூட அங்கு இருக்கக் கூடாது. காசாவை ஆக்கிரமித்து குடியேற்ற வேண்டும். வெற்றி என்றால் இதுதான்” என கடுமையான கருத்து தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பரபரப்பாகியுள்ளது.

ஓய்வுபெற்ற IDF துணைத் தலைமைத் தளபதியும், ‘தி டெமாக்ரட்ஸ்’ என்ற புதிய கட்சியின் தலைவருமான யாயர் கோலன் முன்பு வெளியிட்ட கருத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “இஸ்ரேல் குழந்தைகளை பொழுதுபோக்காகக் கொல்கிறது.

“>

 

இது ஒரு நாகரிகமான நாட்டின் செயலல்ல. இவ்வாறு செயல்பட்டால், இஸ்ரேல் ஒரு புறக்கணிக்கப்பட்ட நாடாக மாறும்” என அவர் சாடியிருந்தார். இதையடுத்து, ஃபீக்லின் தனது தீவிர வலதுசாரி கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், காசாவில் தொடரும் தாக்குதல்களில் இதுவரை 17,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 14,000 குழந்தைகள் படுகொலைக்குள்ளாகலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது. சர்வதேச சமுதாயம் – பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் – இஸ்ரேலை தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தினாலும், இஸ்ரேல் தொடர்ந்து தனது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வரும் போதும், பஞ்சம், மருந்துக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் மேலும் மோசமாகி வருகின்றன.