இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் உள்ள பணத்தை நம்மளுக்கு தெரியாமல் திருடி விடுகிறார்கள். ஆதார், செல் போன் நம்பர், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதால் மோசடி செய்பவர்கள் எளிதில் நம்முடைய தனி விபரங்களை திருடி வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் சிம் கார்டு வழியாக மோசடிகள் அதிகமாக நடைபெறுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும் தொலைதொடர்பு துறையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் செல்போன் சிம் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இந்நிலையில் புதிய சிம் கார்டுகள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் நேற்று (டிசம்பர் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி புதிய சிம் வாங்குவதற்கு KYC விவரங்களை அளிப்பது கட்டாயமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வாங்கினாலும் இந்த முறை பொருந்தும். அதே நேரம் ஒரு ஐடியை பயன்படுத்தி அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை மட்டுமே வாங்க முடியும். வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதை தடுக்கவே இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.