இந்தியாவில் நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 15வது தவணை சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தோடு விவசாயிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு நிதி உதவி தரும் மற்றொரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு 15 லட்சம் ரூபாய் வழங்குகிறது. பிஎம் கிசான் வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்பு என்ற இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள சுமார் 11 விவசாயிகள் கொண்ட சங்கம் அமைக்கப்பட வேண்டும். வேளாண் கருவிகள், உரங்கள், விதைகள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு அரசிடமிருந்து உதவி கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும். முதலில் இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க வேண்டும். உள்ளே சென்றதும் அதை கிளிக் செய்யவும். பதிவு படிவத்தை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை சரிபார்க்கவும். அதன் பிறகு அடையாள ஆவணங்களை சரி செய்து பதிவேற்றம் செய்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.