பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டைக்கு பெயர் பதிவு செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தகுந்த சான்றிதழ்களை சமர்ப்பித்து புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் விலாசம், மொபைல் எண், பிறந்த தேதியில் உள்ள பிழை உள்ளிட்டவையும், கைவிரல் ரேகை, கருவிழி பதிவும் செய்யப்படும்.