தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை இணைக்கும் விதமாக சென்னை- கோட்டயம் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் 13 மணி நேர முதல் 14 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. எனவே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துவிட்டால் வெறும் 9 மணி நேரத்தில் சென்று விடலாம் என்கிறார்கள். தற்போது சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை -கோட்டயம் வழிதடத்தில் இயக்கத்திற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி டிசம்பர் 1 முதல் ஜனவரி 2024 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இது சென்னையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு கோட்டயத்திற்கு இரவு 11 மணிக்கு வந்தடையும். வாரத்தில் வெள்ளி, ஞாயிறு என இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படும். மறு மார்க்கத்தில் கோட்டயத்தில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் ஒரு மணிக்கு வந்து சேரும். இந்த சிறப்பு சேவையானது சோதனை முயற்சியாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடித்து விட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.