
அறிமுக இயக்குனர் ராம் இந்திரா தற்போது புது முகங்களை வைத்து மனிதர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் மட்டுமே நடிக்கும் நிலையில் ஒரு பெண் கூட கிடையாது என்று கூறப்படுகிறது.
இந்த படம் மனிதர்கள் குணத்தை விசித்திரங்களை சொல்லும் திரில்லர் கதை அம்சமாக அமைந்துள்ளது. இதன் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு இரவில் நடக்கும் வித்தியாசமான கதை அம்சங்களை வைத்து சுவாரசியமான பின்னணியாக இந்த படத்தை இயக்குனர் இயக்கியுள்ளார். அதாவது ஒரு இரவு நேரத்தில் ஆறு நண்பர்கள் சேர்ந்து மது குடிக்கும் நிலையில் திடீரென அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் ஏற்படும் தாராறு போன்றவைகள் கதையின் சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது.
இது முழுக்க இரவு நேரத்தில் நடக்கும் கதை என்பதால் இதுவரை திரையில் கண்டிராத புதுமையான அனுபவமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.