இந்திய மக்கள் பெரும்பாலும் தங்க ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். குறிப்பாக முதலீடு செய்வதற்கும் தங்கம் சிறந்த தேர்வாக இருப்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் பொதுவாக வீட்டில் எவ்வளவு தங்கம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அதாவது வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு இருக்கிறது. அந்த வரம்பை மீறி வைத்திருந்தால் கண்டிப்பாக வருமான வரி செலுத்த வேண்டும்.

அதன்படி ஒரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை என்றால் வீட்டில் 250 கிராம் வரை தங்கத்தை வைத்திருககலாம். இதேபோன்று திருமணம் ஆகாத ஆண் ஒருவர் 100 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம். அதே நேரத்தில் திருமணம் ஆகி இருந்தால் ஒரு பெண் வீட்டில் 500 கிராம் அளவுக்கு தங்கத்தை வைத்திருக்கலாம். அதே சமயத்தில் திருமணமான ஆண் ஒருவர் 100 கிராம் தங்கத்தை மட்டும் தான் வைத்திருக்க அனுமதி உண்டு. இதற்கு வரி செலுத்த வேண்டாம். இந்த அளவை தாண்டினால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். அதேப்போன்று 3 வருடங்களுக்குப் பிறகு தங்கத்தை விற்பனை செய்தால் அதற்கு 20% வரி செலுத்த வேண்டும். மேலும்  தங்க பத்திரங்களில் முதலீடு செய்யும் போது அதை 3 வருடங்களுக்குள் விற்பனை செய்தால் அதற்கும் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.