தமிழகத்தில் மக்கள் தங்களது சொத்துக்களை விருப்பப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்கு உயில் எழுதுவது வழக்கம். இது எழுதுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம். ஒருவர் தங்களுடைய சொத்துக்களை தான் இறந்த பின்னர் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று இறப்பதற்கு முன்பு எழுதுவது தான் உயில் பத்திரம். இந்த பத்திரத்தை முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும். இதற்கு சில விதிமுறைகளும் உள்ளன. அதாவது உயில்கள் வாரிசுகளுக்கு மட்டுமே எழுத வேண்டும் என்பதில்லை. தனக்கு விருப்பமான யாருக்கு வேண்டுமானாலும் எழுத முடியும்.

ஒருவேளை வாரிசு இருந்தும் அவரைத் தவிர வேறு யாருக்காவது எழுதி வைத்தால் வாரிசுகளால் அதைக் கேள்வி கேட்கவோ எதிர்க்கவோ முடியாது. வாரிசுகளுக்கு எழுதி வைத்தால் மனைவி அதில் உரிமை கேட்க முடியாது. அப்படி தேவை இருந்தால் மனைவிக்கு ஒரு பங்கு சேர்த்து எழுத வேண்டும். இல்லையென்றால் மனைவியை நாமினியாக நியமிக்கலாம். அதனைப் போலவே ஒருவர் தான் சம்பாதித்த சொத்தை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும். பூர்வீக சொத்துக்கு உயில் எழுத முடியாது. மேலும் உயில் எழுதும் போது இரண்டு சாட்சிகளின் கையெழுத்து அவசியமாகும். அதாவது வக்கீல் மற்றும் டாக்டர் கையெழுத்து இதற்கு அவசியம்.