பொதுமக்கள் பலரும் தற்போது அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி ஒருமுறை முதலீட்டில் மாதாந்திர வருமானத்தை பெறுவதற்கு தபால் அலுவலகத்தின் வருமான திட்டம் உள்ளது. இதில் பத்து வயது உடைய மைனர் முதல் நாட்டின் குடியுரிமை பெற்ற அனைவரும் கணக்குகளை திறந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச வரம்பு ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஒன்பது லட்சம் ரூபாய் வரை உள்ளது.

அதுவே கூட்டு கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். POMIS திட்டத்திற்கு தபால் அலுவலகத்தில் தற்போது 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இதில் இரண்டு லட்சம் முதலீட்டை ஐந்து ஆண்டு செலுத்தும் போது மாதம் 1223 ரூபாய் வட்டி கிடைக்கும். மேலும் உதிர்வு கால முடிந்த பிறகு அவர்களின் வைப்புத் தொகை முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் MIS திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு வருடத்திற்கு பிறகு தங்களுடைய டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள எந்த தபால் நிலையத்தில் இருந்தோம் தங்கள் கணக்குகளை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு வரி சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாதாந்திர வட்டி பணத்திற்கு வரி விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.