இந்தியாவில் தற்போது வங்கிகளை விட தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் அதிக அளவிலான லாபம் தருவதால் மக்கள் இதில் முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது முதிர்வு காலத்தில் 20 லட்சம் ரூபாய் வரை லாபம் தரும் கிராமப்புற அஞ்சல் நிலைய காப்பீட்டு திட்டத்தில் 19 முதல் 45 வயது உடையவர்கள் இணைந்து பயன்பெறலாம். இதில் 15 ஆண்டு அல்லது 20 ஆண்டுகள் முதிர்வு காலம் அடிப்படையில் விரும்பிய தொகையை நீங்கள் முதலீடு செய்து இரட்டைப்பு லாபத்தை பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்கு தினம் தோறும் 95 ரூபாய் முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டு பாலிசி முதிர்வு காலத்தில் 13.72 லட்சம் பெற முடியும். ஆனால் முதலீடு செய்ய தொடங்கிய பிறகு முதிர்வு கால முடிவடைவதற்கு முன்பு செலுத்திய பணத்தை திரும்ப பெற்றால் 60% தொகையை மட்டுமே பெற முடியும். மீதமுள்ள தொகை பாலிசி முடிந்த பிறகு தான் கிடைக்கும். எனவே முதிர்வு காலத்தில் பயனுள்ள விதமாக சேமிக்க விரும்பினால் உடனடியாக கிராமப்புற அஞ்சல் நிலைய காப்பீட்டு திட்டத்தில் இணைந்தே நீங்கள் இரட்டிப்பு லாபத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.