இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில் ஆதாரில் உங்களுடைய மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

மொபைல் எண்ணை ஆன்லைன் மூலமாக அல்லது ஆஃப்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு முதலில் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று ஆதார் புதுப்பிப்பு அல்லது திருத்த படிவத்தை எடுத்து உங்கள் மாற்றப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். அதனை சரிபார்த்த பிறகு உங்கள் படிவத்தை ஆதார் நிர்வாகி இடம் சமர்ப்பிக்கலாம். உங்களது விழித்திரை ஸ்கேன் மற்றும் கைரேகைகள் உட்பட உங்களது பயோமெட்ரிக்ஸை வழங்குவதன் மூலமாக உங்களது விவரங்கள் அனைத்தும் அங்கீகரிக்க வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் ஆஃப்லைன் சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு படிவத்தை சமர்ப்பித்து பணம் செலுத்தியதும் உங்களின் புதுப்பிப்பு கோரிக்கை ஏன் இருக்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். உங்களது மொபைல் எண் அப்டேட் செய்யப்பட்டதை இந்த நம்பரை பயன்படுத்தி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அடுத்த 30 நாட்களுக்குள் உங்களது மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.